பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் தேர்வு

நெல்லை, டிச.11: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் நெல்லை மாவட்ட பொதுக்குழு மேலப்பாளையத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் முகமதலி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முஹம்மது அமீன் வரவேற்றார். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக மாநில பொது செயலாளர் ஹாலித் முகம்மது பங்கேற்றார். கூட்டத்தில் இயக்கத்தின் கடந்த கால செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்தது. மாவட்ட தலைவராக பத்தமடை முகம்மதலி, செயலாளராக ஏர்வாடி இம்ரானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய மாவட்ட தலைவர் நிறைவுரையாற்றினார்.

பொதுக்குழுவில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் உயிரிழப்பை ஏற்படுவதை தடுக்க வேண்டும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாத்திட போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும். மழையின் காரணமாக நெல்லை மாவட்டத்தில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது. மேலும் சாலைகளும் அதிக அளவில் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த வீடுகளை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்குவதோடு, சாலைகளையும் சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: