வேட்புமனு தாக்கலுக்கு ஆட்கள் வராததால் வெறிச்சோடி கிடந்த அரசு அலுவலகங்கள்

கரூர், டிச. 11: ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் செய்ய குறைந்த அளவில் வேட்பாளர்கள் வந்ததால் பெரும்பாலான அலுவலகங்கள் வெறிச்சோடியே காணப்பட்டது. கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு டிசம்பர் 9ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. பஞ்சாயத்து மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனுக்களை பெற அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்நிலையில் டிசம்பர் 9ம் தேதி மாவட்டம் முழுவதும் 39 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர் நேற்றும் கரூர் ஒன்றிய அலுவலகம் உட்பட பல்வேறு ஒன்றிய அலுவலகங்களும், பஞ்சாயத்து அலுவலகங்களும் வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வராததால் அனைத்து அலுவலகங்களும் வெறிச்சோடியே காணப்பட்டது. 1685 பதவிகளுக்கு நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தலில் 11ம் தேதியில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்வது சூடு பிடிக்கத் துவங்கும் என கூறப்படுகிறது.

Related Stories: