கண்ணமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பெண்குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கண்ணமங்கலம், டிச.10: கண்ணமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியல் பெண்குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

கண்ணமங்கலம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஓருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பெண்குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர்(ஓய்வு) பி.சி.கார்த்திகேயன், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சதீஷ், புவனேஸ்வரி முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை சரோஜினி வரவேற்றார்.

முகாமில், மேற்கு ஆரணி ஒருங்கிணைந்த குழந்தை திட்ட அலுவலர் கண்ணகி கலந்து கொண்டு பெண் குழந்தைகள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும், எந்த ஆண்களும் தொட்டு பேச அனுமதிக்க கூடாது, யாரேனும் தொந்தரவு செய்தால் உடனடியாக பெற்றோருக்கோ அல்லது ஆசிரியருக்கோ தயங்காமல் தகவல் தெரிவிக்க வேண்டும் என மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்தார். பேரணியில் மாணவிகள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். இதில், உதவி தலைமையாசிரியர் பிச்சாண்டி, உடற்கல்வி ஆசிரியை நீலாபாபி, அங்கன்வாடி பணியாளர்கள் சுஜாரதி, உத்ராணி, நித்யா, விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: