கொற்கை வாய்க்கால் கரையில் பத்திரம், பாஸ்புக் நகல் தீவைத்து எரிப்பு

கும்பகோணம், டிச. 5: கும்பகோணம் அடுத்த கொற்கை வாய்க்கால் கரையில் நேற்று காலை 4 பைக்குகளில் 8 பேர் வந்து ஒரு பெரிய அட்டை பெட்டிகளில் இருந்த பத்திரம், பாஸ்புக் நகல்களை கீழே கொட்டி தீயிட்டு கொளுத்தினர்.அப்போது அவர்கள் செல்போன் மூலம் தகவலை கொடுத்து கொண்டே பத்திரம், பாஸ்புக் நகலை தீயிட்டு கொளுத்தி வந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகையானதால் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீசார் வருவதற்குள் 8 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். பட்டீஸ்வரம் போலீசார் வந்து பார்த்தபோது பாதி எரிந்த நிலையில் இருந்த பேப்பரில் குத்தாலம் சார்பதிவாளர் என அச்சிடப்பட்டிருந்தது.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: