உலக மாற்றுத்திறனாளிகள் தினம் விளையாட்டுப் போட்டி

காங்கயம்,  டிச. 4:ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வளமையம் காங்கயம் உள்ளடங்கிய  கல்வித்திட்டத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு மாற்றுத்திறன் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. வளமைய மேற்பார்வையாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர்  சுரேஷ்குமார் போட்டிகளை துவக்கிவைத்தார். விளையாட்டுப் போட்டிகளை பகுதி நேர ஆசிரியர்  சுகுணா முன்னின்று நடத்தினார். தொடர்ந்து மாற்றுத்திறன் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள்  நடைபெற்றது. இதில் பங்குகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுப்பொருட்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Advertising
Advertising

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்  பயிற்றுநர்கள், கணக்காளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை  சிறப்பாசிரியர்கள் பாப்பாத்தி, புனிதவதி, ஸ்டெல்லாமேரி மற்றும் இயன்முறை  மருத்துவர் பிஜிதெரசா ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: