கொங்கணாபுரத்தில் ஆடு விற்பனை ஜோர்

இடைப்பாடி, டிச.1: இடைப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரத்தில் சனி சந்தை நேற்று கூடியது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 6300 ஆடுகள், 800 பந்தய சேவல்கள், 1200 சேவல் கோழிகள், 90 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்திருந்தது. இதில் 10 கிலோ எடையுள்ள ஆடு 4,6005,600 வரையிலும், 20 கிலோ எடையுள்ள ஆடு 9,00011,600 வரையிலும் விலை போனது. வளர்ப்பு குட்டி ஆடு 1,5002,000 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. பந்தய சேவல் அதன் திறன் பொருத்து 8503,800 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதனை வாங்க வெளியூர் வியாபாரிகள் அதிகளவு வந்து அப்பகுதியில் முகாமிட்டு வாங்கி சென்றனர்.

இதேபோல் சேவல் கோழிகள் 250900க்கு  விற்பனை செய்யப்பட்டது. சின்னவெங்காயம் 90105, பெரியவெங்காயம் 80100 வரையிலும், கேரட் 3040, பீன்ஸ் 3040, பீட்ரூட் 30, முட்டைகோஸ் 2530, முள்ளங்கி 20, வெண்டைக்காய் 2025, இஞ்சி 6080, மிளகாய் 30, கத்தரிக்காய் 2535, தக்காளி 1520க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை வாங்க அதிகாலை முதலே எராளமான வியாபாரிகள், பொதுமக்கள் வந்ததால் சந்தையில் கூட்டம் அலைமோதியது. நேற்று கூடிய சந்தையின் மொத்த வர்த்தகம் ₹3 கோடியை தாண்டியது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: