ராஜபாளையம் ராம்கோ கல்லூரியில் 2வது சர்வதேச செஸ் போட்டி தொடக்கம்

ராஜபாளையம், டிச. 1: ராஜபாளையத்தில் உள்ள ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில், 4 நாள் நடக்கும் இரண்டாவது சர்வதேச செஸ் போட்டி நேற்று தொடங்கியது. ராம்கோ கல்விக்குழும முதன்மை கல்வி அதிகாரி முனைவர் வெங்கட்ராஜ், விருதுநகர் மாவட்ட செஸ் கூட்டமைப்பு தலைவர் கோபால்சாமி, சர்வதேச செஸ் போட்டி நடுவர் அனந்தராம், தமிழ்நாடு செஸ் கூட்டமைப்பு செயலாளர் விஜயராகவன் ராம்கோ கல்லூரி முதல்வர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி போட்டியை தொடங்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் கணேசன் வரவேற்றார். முனைவர் வெங்கட்ராஜ் தலைமை உரையாற்றினார். அப்போது  செஸ் போட்டிக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்கும் ராம்கோ நிறுவனங்களின் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராவின் பங்களிப்பு குறித்து எடுத்துக் கூறினார். கல்லூரி துணை முதல்வர் ராஜகருணாகரன், துணைப் பொதுமேலாளர் செல்வராஜ் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.  

போட்டியில் கலந்து கொள்ள 380க்கும் மேற்பட்ட முன்னணி செஸ் வீரர்கள், கிராண்ட் மாஸ்டர்கள் மற்றும் சர்வதேச மாஸ்டர்கள் வந்துள்ளனர். கிராண்ட் மாஸ்டர் ஆர்.ஆர்.லக்ஷ்மண், முனைவர் வெங்கட்ராஜ் ஆகியோர் முதலாம் நகர்வினை நகர்த்தி போட்டியினை துவக்கி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை சர்வதேச செஸ் போட்டி நடுவர் ஆர்.அனந்தராம் தலைமையிலான குழுவுடன், ராம்கோ கல்லூரி உடற்கல்வி இயக்குனர் வீரமணி மற்றும் பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories: