பர்மிட் இல்லாத 4 ஆட்டோ பறிமுதல்

சேலம், நவ. 29: சேலத்தில் பர்மிட் இல்லாமல் இயக்கிய 4 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.சேலத்தில் பள்ளிக்குழந்தைகள், பயணிகளை ஆட்டோக்களில் அதிகளவு ஏற்றிச் செல்வதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து சேலம் மாநகர் முழுவதும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போக்குவரத்து போலீசாருடன் இணநை–்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் சேலம் கோட்டை, அழகாபுரம் பகுதிகளில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அதிக பயணிகளை ஏற்றி வந்த 6ஆட்டோக்களுக்கு ₹ 6ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பர்மிட் இல்லாமல் இயக்கிய 4 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், சேலத்தில் பள்ளிகுழந்தைகளை அதிக அளவு  ஆட்டோக்களில் ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இச்சோதனை தொடர்ந்து நடத்தப்படும், என்றனர்.

Related Stories: