இதய நிறைவு தியான பயிற்சி

திருப்பூர், நவ.29:திருப்பூர்-தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையத்தில் உள்ள  ஹார்ட்புல்னஸ்  தியான பயிற்சி மையத்தின் சார்பில் தொழில் முனைவோர்களையும், நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு சமன்படுத்தப்பட்ட தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை என்ற தலைமையில் சொற்பொழிவு நடந்தது. இதில், இதய நிறைவு நிறுவன தலைவர் கம்லேஷ் தேசாய் பட்டேல் பேசியதாவது. தியானத்தை அனைவரும் கற்க வேண்டும். தியானம் மூலம் உடலும், மனமும் செம்மையாகிறது. தொடர் தியானத்தினால், ஒவ்வொருவரின் சிந்தனையும் மேம்படுகிறது. அதன் பயனாய், தொழில்துறையினர் சரியான திட்டமிடல் மூலம், வெற்றிகளை குவிக்கலாம். மனிதவாழ்வின் ஆணி வேராக இருப்பது மகிழ்ச்சி தியானத்தில் இது நிரந்தரமாக கிடைக்கிறது. துாக்கம் என்பது சோம்பேறித்தனம் அல்ல, குழந்தைகள்,தூங்கும் போதுதான் வளர்கின்றன. தூக்கம் என்பது வளர்ச்சியின் ஆதாரம். ஆழ்ந்த உறக்கம் உள்ளவர்கள், எடுத்த காரியத்தை வெற்றியாக முடிக்க முடியும்.தியானம் மூலம், மனதில் உள்ள கவலைகள், துயரங்கள் ஒழிந்து, ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். ‘பிராணாஹூதி’ தியானத்தால், மனமும், உடலும் ஆரோக்கியமாக மாறிவிடுகிறது. திருப்பூர் தொழில்துறையினர் பல ஆண்டுகளாக பயிற்சியில் உள்ளனர். புதிய தொழில்முனைவோரும், இப்பயிற்சியில் இணைய வேண்டும்.  ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும், இதய நிறைவு நிறுவனம் (ஹார்ட்புல்னெஸ் இன்ஸ்டிடியூட்), 165 நாடுகளில், 16 ஆயிரத்துக்கும் அதிகமான பயிற்சியாளர்கள் மூலம், இலவசமாக கற்றுத்தரப்படுகிறது. ஆண்கள், பெண்கள் யாரெனினும், மூன்று நாள் பயிற்சியில் பங்கேற்கலாம்; அதற்கு பிறகு, வீட்டில் தியானம் செய்யலாம்.   இவ்வாறு, அவர் பேசினார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம், பொதுச்செயலாளர் விஜயகுமார், பழனிசாமி, ராமசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: