கொங்கணாபுரம் ஒன்றியத்தில் 52 இடங்களில் நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணி துவக்கம்

இடைப்பாடி, நவ.27:இடைப்பாடி- இருப்பாளி கூட்டு குடிநீர்திட்டத்தின் கீழ், கொங்கணாபுரம் ஒன்றியத்தில் 52 இடங்களில் புதியநீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணி பூமி பூஜையுடன் துவங்கியது. இடைப்பாடி- இருப்பாளி கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக இடைப்பாடி,கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, நங்கவள்ளி, தாரமங்கலம், வீரபாண்டி,பனமரத்துப்பட்டி, சேலம் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் பூலாம்பட்டி,இடங்கணசாலை, இளம்பிள்ளை, பனமரத்துப்பட்டி ஆகிய 4 பேரூராட்சிபொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ், சரியாக குடிநீர் செல்லாத இடங்களில் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படிகொங்கணாபுரம் பகுதியில் 34 இடங்களிலும், இடைப்பாடி பகுதியில் 18இடங்களிலும் ₹47 கோடி மதிப்பீட்டில் குடிநீர் தொட்டி கட்டுமான பணி பூமிபூஜைடயுடன் துவங்கியது.

கொங்கணாபுரம் ஒன்றியம் கரட்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ்நாடுகுடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சந்திரமோகன் தலைமைவகித்தார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கரட்டூர் மணி, முன்னாள்மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன், உதவி நிர்வாக பொறியாளர் கல்யாணி, உதவி பொறியாளர்கள் ரம்யா, சேகர், மாணிக்கம், ஒப்பந்ததாரர்கள்தனசேகரன், பாலசுப்ரமணியம், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜா உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.

Related Stories: