ஆறுமுகநேரி, நவ. 26: முக்காணி ஆற்றில் மாயமான வாலிபரை தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்டனர். ஆறுமுகநேரி பாரதிநகர் திருமால் மகன் சரவணன்(26), காணியாளர் தெரு பட்டுராஜ் மகன் ராஜேஸ்(30), உசிலம்பட்டியை சேர்ந்த கருப்பையா (45), ஆறுமுகநேரி வடக்கு காமராஜபுரத்தை சேர்ந்த லிங்கபாண்டி மகன் சேர்மத்துரை(26) ஆகியோர் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் முக்காணி ஆற்றில் குளிக்க சென்றனர். இவர்களில் சேர்மத்துரை, இந்த கரையில் இருந்து எதிர்கரைக்கு நீந்தி வருகிறேன். நீங்கள் எனது உடைமைகளை எடுத்துக் கொண்டு மறுகரைக்கு வாருங்கள் எனக்கூறி விட்டு சென்றுள்ளார். ஆற்றின் பாதி தூரம் சென்றதும் கையை மேலே தூக்கிய நிலையில் மாயமானார்.