அவிநாசி அருகே தரமற்ற சாலை அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

அவிநாசி,நவ.22: அவிநாசி அருகே நடுவச்சேரியில் தரமற்ற கான்கிரீட் சாலை அமைப்பதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவிநாசி ஒன்றியம், நடுவசேரி ஊராட்சி வரதராஜ்நகர் காலனியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து ரூ.8 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நேற்று துவங்கியது.

இந்நிலையில், குப்பைகள் நிறைந்த கழிவு மண்ணைக் கொண்டு வந்து சாலை அமைக்க முயற்சித்துள்ளனர். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் குப்பைகள் கலந்த கழிவு மண்ணை நிரப்பி தரமற்ற முறையில் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த ஊராட்சி செயலாளர் மணிகண்டன் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில், குப்பைகள் கலந்த கழிவு மண் அகற்றப்பட்டு தரமான மண் நிரப்பப்பட்டு ரோடு போடும் பணி தொடங்கப்படும் என்று  உறுதியளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: