பனிப்பொழிவு அதிகரிப்பு எதிரொலி கரூரில் போர்வைகள் விற்பனை விறுவிறுப்பு

கரூர், நவ. 19: கரூரில் பனி பொழிவு ஆரம்பித்துள்ளதால் நகரின் பல்வேறு பகுதிகளில் போர்வை வியாபாரம் சூடு பிடித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலமான இந்த சீசனில் கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு வரை நல்ல மழை பெய்தது. இதனையடுத்து, மாவட்டம் முழுதும் குறிப்பிடத்தக்க மழை பெய்யவில்லை. மாறாக கடந்த ஒரு வாரமாக அதிகாலையிலேயே பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளது. இதன் தாக்கம் 8 மணி வரை நீடித்து வருகிறது. இதனால், நகராட்சிக்குட்பட்ட கோவை சாலை, ஜவஹர் பஜார் போன்ற பகுதிகளில் வடமாநிலத்தவர்கள் போர்வை வியாபாரத்தை துவக்கியுள்ளனர். டிசைன் டிசைனாக விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த போர்வை ரகங்கள், பல்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களும் இதனை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். மற்றபடி கரூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் போர்வைகள்தான் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: