முத்துப்பேட்டை, நவ.19: முத்துப்பேட்டையில் குடியிருப்புகள் நடுவே குளம்போல் தேங்கி கிடந்த கழிவுநீர் தினகரன் செய்தி எதிரொலியாக பேரூராட்சி நடவடிக்கை எடுத்ததையடுத்து அகற்றப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை 2-வது வார்டு ரஹ்மத்நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ரஹ்மத்நகரில் உள்ள குடியிருப்புகளின் கழிவுநீர், மழைநீர் ஆகியவை வடியும் வடிகால் ரயில்வே தண்டவாளம் துவங்கி திருத்துறைப்பூண்டி சாலையை கடந்து புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள வடிகாலில் சென்று அடைகிறது. இந்த வடிகாலில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு சாலையில் பெருக்கெடுத்து ஓடி நெடுவெங்கும் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும். கடந்த ஒருவாரமாக இந்த வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடியிருப்புகளிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கியது. நேற்று முன்தினம் பெய்த மழையால் ரஹ்மத் நகர் முதல் சந்து (பெட்ரோல் பங்கு பின் புறம்) மற்றும் இரண்டாவது சந்தில் கழிவுநீரும் மழைநீரும் இரண்டொரு கலந்து தேங்கி கிடந்தது.