அனைத்து மாற்றுத்திறனாளிகள் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு

கரூர், நவ. 14: அடையாள அட்டை குறித்துமாற்றுத்திறனாளிகள்தெரிந்து கொள்ளும்வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். இநத கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும. அரசு மற்றும் பொது நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளிள் தடையற்ற சூழலில் சென்று வர சக்கர நாற்காலி வசதி மற்றும் உடன் அழைத்து கோரிக்கை விபரங்களை எடுத்துக் கூறி உதவிபுரிதல் மற்றும் துணை செய்ய பணியாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

பின்னர் இது குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: அரசுத்துறை அலுவலர்களை தங்களது கோரிக்கைகளுக்காக மாற்றுத்திறனாளிகள் அலுவலகங்களுக்குள் எளிதில் சென்று வர வசதியாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் சாய்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உறுதி செய்து ஒரு வார காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பள்ளி மற்றும் கல்லூரிகள், வணிக வளாகங்கள் போன்ற மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுககு என சாய்தள வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து சாய்தளங்கள் இல்லாத இடங்களில் சாய்தளங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அலுவலகங்களில் முதல் தளத்திற்கு செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள தங்களின் சார்பாக ஒரு உதவியாளரை அனுப்பி சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் பொறுமையுடன் கேட்க, பரிசீலனை செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுககு ஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டை வழங்க வட்டார அளவில் சிறப்பு முகாம்கள் நடத்த சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களுடன் இணைந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அடையாள அட்டை குறித்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் தெரிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து, வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த 70வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவருக்கு மூன்று சக்கர வாகனத்தையும், காதொலிக் கருவியையும், அரசு கல்லு£ரியில் பயின்று வரும் மாணவி ஜனனிக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனத்தையும் கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்வில், சார்பு நீதிபதி மோகன்ராம், மருத்துவக் கல்லு£ரி முதல்வர் ரோசி வெண்ணிலா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories: