மூடப்படாத ஆழ்துளை குழாய்

பணகுடி, நவ. 14:  பணகுடி அருகே உள்ள சிவகாமிபுரம் ராஜிவ்காந்தி நகர் அருகே பொதுகழிவறை உள்ளது. இதன் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அருகிலேயே போர்வெல் போடப்பட்டது. இதில் தண்ணீர் வராததால், அதனை மூடாமல் அப்படி விட்டுச் சென்றுள்ளனர்.

மணப்பாறையில் சிறுவன் சுஜித், ஆழ்துளை கிணறில் தவறி விழுந்து இறந்த சம்பவத்தையடுத்து திறந்த நிலையிலுள்ள போர்வெல்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ராஜிவ் காந்தி நகரில் திறந்து கிடந்த போர்வெல்லில் சாக்குபைகளை மட்டும் போட்டு மூடிச் சென்றுள்ளனர். எனவே விபரீதம் நிகழும் முன்பு இந்த போர்வெல் குழியை நிரந்தரமாக மூட பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>