பெட்டைக்குளத்தில் மனுநீதிநாள் முகாம் பயனற்று கிடக்கும் கிணறுகளில் மழைநீரை சேகரிக்க வேண்டும்

திசையன்விளை, நவ. 14:  திசையன்விளை அருகே உள்ள பெட்டைக்குளம் காவண்ணா திருமண மண்டபத்தில் மனுநீதிநாள் முகாம் நடந்தது. கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை வகித்து 66 பேருக்கு விவசாய கருவிகள், 16 பேருக்கு ரேஷன் கார்டுகள், 7 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, 8 பேருக்கு முதியோர் உதவித்தொகை ஆணையை வழங்கினார்.பின்னர் கலெக்டர் ஷில்பா பேசியதாவது: தமிழகம் முழுவதும் கடந்த 6 மாதங்களாக குடிமராமத்து பணிநடந்து வருகிறது. இது நல்ல பலனை கொடுக்கும். கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையை சரிசெய்ய ஒவ்வொரு வீட்டிலும் மழைநீரை வீணாக்காமல் சேகரிக்க வேண்டும். இதற்கு உள்ளாட்சி அமைப்புகள் வழிகாட்டும். நிலத்தடி நீரை பாதுகாக்க பயனற்று கிடக்கும் கிணறுகளை மழைநீரை சேமிக்கும் இடமாக மாற்றலாம்.

 2018-19ம் ஆண்டில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. தற்போது பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள குழந்தைகளில் 50 சதிவிகித குழந்தைகள் உயரம், எடை குறைவாக உள்ளனர். பெண் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்க வேண்டும். அரிசி சோறு மட்டும் போதாது. கம்பு, சோளம், குதிரைவாழி உட்பட சத்துணவு சாப்பிட வேண்டும். தற்போது குழந்தைகள் ரத்தசோகை நோயால் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு 5 வயது வரை அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும்’ என்றார். ஞானதிரவியம் எம்பி முன்னிலை வகித்து பேசுகையில், இப்பகுதியில் சிதிலமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் பிரதீப் தயாள், ராதாபுரம் தாசில்தார் பட்டமுத்து, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மகாலட்சுமி, மண்டல துணை தாசில்தார் ரமேஷ், தேர்தல் துணை தாசில்தார் பேட்ரிக் சிலுவை அந்தோனி, வட்ட வழங்கல் அலுவலர் வேல்முருகன், வருவாய் ஆய்வாளர்கள் கிறிஸ்டி தவசெல்வி, மஞ்சு, கொம்பையா, விஏஓக்கள் குமார், செல்வக்குமார், இசக்கியப்பன், மகாஅரிச்சந்திரன், மணிகண்டன், ஜேம்ஸ், அயூப்கான், முத்துமாரி, செம்மலர், சத்தியவாணி, அய்யாத்துரை, மின்வாரிய உதவி மின்பொறியாளர் கார்த்திக், உதவி செயற்பொறியாளர் முகமதுஅலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>