பாபநாசம் பகுதியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரிப்பு

பாபநாசம், நவ. 13: பாபநாசம் பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் அதை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாபநாசத்தில் பெருமாள் கோயில் சன்னதி தெரு உள்ளிட்டப்பகுதிகளில் மர நாய், குரங்குகள் அதிகளவில் உள்ளது. இந்த பகுதியில் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை குரங்குகள் நாசம் செய்கிறது. மேலும் வீடுகளின் கூரை, ஓடுகளை பிய்த்து எரிகிறது. மேலும் தெருவில் நடமாடும் பொதுமக்களை விரட்டி விரட்டி கடிக்க வருகிறது. இதனால் தெருவில் குழந்தைகள் விளையாட கூட பயப்படுகின்றனர். பாபநாசம் பகுதியில் சுற்றி திரியும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>