கொடைக்கானலில் ஆபத்தான மரங்கள் அகற்றப்படுமா?

கொடைக்கானல், நவ. 13: கொடைக்கானலில் சாலையோரம் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கொடைக்கானலில் கடந்த கஜா புயலின் போது சாலையோரம் இருந்த மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சமீபத்தில் பெய்த கனமழையின் போதும் கொடைக்கானல்- வத்தலக்குண்டு சாலையில் பெருமாள்மலையை அடுத்த மச்சூர் பகுதியில் மரங்கள் விழுந்து போக்குவரத்து தடைபட்டது. எனவே கொடைக்கானல் மலைப்பகுதியில் சாலையோரம் விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘கொடைக்கானல் ஏரிச்சாலையின் கரை பகுதியில் பட்டுப்போன மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் எந்நேரமும் விழும் நிலையில் உள்ளது. இதனால் ஏரிச்சாலையில் நடந்து செல்பவர்களுக்கும், படகில் பயணிப்பவர்களுக்கும் இம்மரங்களால் ஆபத்து உள்ளது. இதேபோல் கொடைக்கனால் நகராட்சி, வில்பட்டி- பள்ளங்கி சாலையில் ஏராளமான மரங்கள் விழும் நிலையில் உள்ளன. எனவே உயிர்சேதம் ஏற்படும் முன்பு இந்த ஆபத்தான மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories:

>