மூலைக்கரைப்பட்டி அருகே ரூ.1.30 லட்சத்துடன் இளம்பெண் மாயம்

நாங்குநேரி, நவ.13:நாங்குநேரி அருகே மூலைக்கரைப்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முருகன் (57). அப்பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இவரது 2வது மகள் கற்பகம்(25) என்பவருக்கும், கழூவூரை சேர்ந்த சின்னத்துரைக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணம் முடிந்த ஓராண்டில் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக கற்பகம், கணவரை பிரிந்து குழந்தையுடன் மூலைக்கரைப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2ம்தேதி கற்பகம், குழந்தையை வீட்டில் விட்டு திடீரென மாயமானார். அவர் செல்லும்போது வீட்டில் இருந்த தனது தாயின் 2 ஏடிஎம் கார்டுகளை எடுத்துச் சென்றுள்ளார். அதன்மூலம் ரூ.1.30 லட்சம் பணத்தை எடுத்துள்ளது தெரிய வந்தது. உறவினர் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை பற்றிய தகவல் இல்லை. இதையடுத்து கற்பகத்தின் தந்தை, மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிந்து மாயமான பெண்ணை தேடி வருகிறார்.

Related Stories:

>