மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொடியேற்றுவிழா

தா.பேட்டை, நவ.12: தா.பேட்டை ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. தா.பேட்டை, மேட்டுப்பாளையம், சேருகுடி, மங்களம், துலையாநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் காமராஜ் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் சுப்பிரமணியன், முருகேசன், சேகர், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். கட்சி கொடியேற்றப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அப்போது மக்களின் அடிப்படை பிரச்சனைகளை களைந்திட தமிழகஅரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென நிர்வாகிகள் வலியுறுத்தி பேசினர். கட்சி பொருப்பாளர்களும், உறுப்பினர்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.

Related Stories: