சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா

முசிறி, நவ.12: முசிறி, தா.பேட்டை, தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு வெள்ளூர் திருக்காமேஸ்வரர், திருஈங்கோய்மலை மரகதாசேஸ்வரர், தொட்டியம் அனலாடீஸ்வரர், தா.பேட்டை காசிவிசுவநாதர், மங்களம் மங்கைபாகேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் சிவலிங்க திருமேனிக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து லிங்கதிருமேனி முழுவதற்கும் அன்னத்தால் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிவலிங்கத்தின்மீது சாத்தப்பட்டிருந்த அன்னம் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு மீன்களுக்கு உணவாக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Advertising
Advertising

Related Stories: