கொடும்பாளூர் இடங்கழிநாயனார் கோயிலில் நாளை குருபூஜை விழா

விராலிமலை, நவ.12: விராலிமலை அருகே கொடும்பாளூரில் உள்ள இடங்கழிநாயனார் கோயில் 10ம் ஆண்டு குருபூஜை விழா நாளை நடைபெறுகிறது.சைவ சமயத்தில் சிவனடியார்களாக இருந்து சிவனால் ஆட்கொள்ள பட்டவர்கள் நாயன்மார்கள் என புராணங்களில் அழைக்கப்படுகின்றனர். 63 நாயன்மார்களில் ஒருவரான இடங்கழிநாயனாருக்கு கொடும்பாளூரில் கோயில் உள்ளது. நாயன்மார்கள் அவதரித்த இடங்களில் அவர்களுக்கு விருத்தாசலம் அறுபத்து மூவர் திருப்பணி அறக்கட்டளை சார்பில் 10 ஆண்டுகளுக்கு முன் கொடும்பாளூரில் இடங்கழிநாயனாருக்கு கோயில் கட்டி திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.அப்போதிலிருந்து முதல் ஆண்டு தோறும் குருபூஜை விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 10ம் ஆண்டாக குருபூஜைவிழா நாளை (13ம் தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி திருமுறை பாராயணங்கள் செய்து மஹாஅபிஷேகங்கள், மகேஸ்வர பூஜை, தீபாராதனை, திருவிளக்கு பூஜை நடத்தி மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னர் இரவு இடங்கழிநாயனாரின் உற்சவர் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. விழாவில் புதுக்கோட்டை திலவதியார் ஆதீனகர்த்தரர் தயானந்தசந்திரசேகர சாமிகள் கும்பகோணம் திருவடிக்குடில் சாமிகள் பழுவஞ்சி அகத்தியர் அடியார் திருக்கூட்டம் மதுரை லவாய் அருட்பணி மன்றம் கும்பகோணம் திருகயிலாய வாத்திய குழுவினர் உள்ளிட்ட குழுக்களின் சிவனடியார்கள் கலந்து கொள்கின்றனர்.குருபூஜை ஏற்பாடுகளை இடங்கழிநாயனார் வழிபாட்டுமன்ற நிர்வாகி சிவனடியார் திருவண்ணாமலை முத்து தலைமையில் பக்தர்கள் சிவனடியார்கள் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: