பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு ரூ.50 ஆயிரம் பரிசு

திருப்பூர், நவ 7: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2018-19ம் கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட பெற்றோர் ஆசிரியர் கழகம், மாவட்டத்திற்கு ஒன்று தேர்வு செய்யப்பட்டு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து கல்வித்துறையினர் கூறியதாவது: ‘‘பெற்றோர் ஆசிரியர் கழக செயல்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை சில நிபந்தனைகளை அறிவித்துள்ளது. அதன்படி சுகந்திர தின விழா, குழந்தைகள் தின விழா, குடியரசு தின விழா, ஆகியவற்றை சிறப்பாக நடத்தியிருக்க வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தை மாதம் ஒரு முறை நடத்தியிருக்க வேண்டும். மாணவர் சேர்க்கையை உயர்த்தி இருக்க வேண்டும். கல்வியின் தரத்தை உயர்த்தியிருக்க வேண்டும்.  நன்கொடைகள் பெற்று பள்ளியில் வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றியிருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு சரியாக உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகத்தை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தேர்வு செய்து, அந்த பள்ளியின் பெயரை 10ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இதில் சிறப்பாக செயல்பட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும். இவ்வாறு கூறினர்.

Related Stories: