களிமண்ணாலும், அட்டையாலும் ராயல் என் பீல்டு இருசக்கர வாகனத்தை வடிவமைத்த திருப்பூர் நிப்ட் டீ மாணவி

திருப்பூர்,மே 19: திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட் டீ பின்னலாடை மற்றும் ஆடை வடிவமைப்பு கல்லூரியில் 3ம் ஆண்டு காஸ்ட்யூம் டிசைனிங் அண்ட் பேஷன் துறை படிக்கும் ஸ்ரீ கமலி என்ற மாணவி. தனித்திறன் நுன்கலையில் கைதேர்ந்தவர். கரிக்கோல், சுண்ணாம்பு கட்டி, வெள்ளைத்தாள், அட்டைகள் என இவைகளை வைத்து சிற்பங்கள், பொன்மொழிகள், திருக்குறள், தேச தலைவர்களின் உருவப்படம் செய்யும் திறமை படைத்தவர். தற்போது புதிய முயற்சியாக ராயல் என் பீல்டு இருசக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளார். 157 நாட்களாக சக்கரம் மட்டும் வைத்து மீதம் இருக்கும் அனைத்தையும் ஒரு சின்ன உதிரிபாகம் கூட விடுபடாமல் முழுவதும் களிமண்ணாலும்,அட்டைகளாலும் செய்துள்ளார். இது காண்பதற்கு உண்மையான வண்டி நிற்பது போலவே இருக்கிறது. இந்த வண்டியின் மேல் ஒரு பறவை எவ்வாறு தன் சிறகை விரித்து ஆனந்தமாய் பறக்குமோ, அந்த சிறகு வடிவம் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெயிண்ட்,ஸ்பிரே,அக்ரிலிக் பெயிண்ட் கொண்டு கருப்பு நிறம், சில்வர் நிறம்,மஞ்சள் நிறம், தங்க நிறம் என வண்ணங்கள் கண்ணில் தெரிக்க அலங்கரிக்கப்பட்டுள்ளது. சிறப்பாக உருவாக்கிய மாணவியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

The post களிமண்ணாலும், அட்டையாலும் ராயல் என் பீல்டு இருசக்கர வாகனத்தை வடிவமைத்த திருப்பூர் நிப்ட் டீ மாணவி appeared first on Dinakaran.

Related Stories: