பழமையான கவிநாடு கண்மாயில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

புதுக்கோட்டை, நவ.7: புதுக்கோட்டை கவிநாட்டு கண்மாயில் உள்ள கருவேல மரங்களை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்று கவிநாடு கண்மாய். இந்த கண்மாய் நிறைந்தால் சுமார் 500ல் இருந்து 700 ஏக்கர் அளவிலான நிலங்கள் பாசனை வசதிகள் முப்போவம் பெறும். இதனால் விவசாயிகள் ஒரு போவத்தில் நஷ்டம் ஏற்பட்டாலும் அடுத்த போவத்தில் அதனை ஈடுசெய்து கொள்வார்கள். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக நல்ல மழை பெய்யாததால் குளத்தில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் இந்த குளத்து நீரை நம்பி இருந்து விவசாயிகள் விவசாய தொழிலில் ஈடுபடாமல் மாற்று தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கவிநாடு கண்மாயில் தொடர்ந்து பராமரிப்பு பணிகளை செய்யாததால் வரத்து வாரிகள் தூர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக குளத்தில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. இதனால் தற்போது மழை பெய்தாலும் தண்ணீர் அதிக அளவில் தேங்காத நிலை ஏற்படும். தண்ணீர் தேங்கவில்லை என்றால் விவசாயம் பொய்த்துவிடும். இதனால் மழை தொடங்கியுள்ள நிலையில் பொதுப்பணித்துறையை சேர்ந்த அதிகாரிகள் மழை விரைந்து தகுந்த நடவடிக்கை எடுத்து கண்மாயில் உள்ள வேலி கருவை மரங்களை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: