கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் அதிகாரியிடம் மனு

தண்டராம்பட்டு, நவ.5: தண்டராம்பட்டு அடுத்த வீரணம் கிராமத்தில் ஊர் மைல்கல் உள்ளது. இந்த இடத்தில் கற்கால மக்கள் பயன்படுத்திய குகை, குடிநீருக்காக பயன்படுத்திய சுணை, முதுமக்கள் தாழி, எல்லை வரையறை உட்பட்ட பகுதிகளை கண்டுபிடிப்பதற்காக நடுகற்கள், சுடுகாட்டில் வட்ட வடிவிலான நடுகற்கள் உள்ளது. இந்த இடத்தில் கல்குவாரி அமைப்பதற்காக தனிநபர் ஒருவர் திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மற்றும் மாவட்ட கனிமவள அலுவலரிடம் மனு அளித்தாராம். அந்த மனுவின் மீது விசாரணை செய்வதற்காக கடந்த மூன்று தினங்களுக்கு முன் தாசில்தார் நடராஜன் வீரணம் கிராமத்திலுள்ள மலைப் பகுதியில் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று எங்கள் பகுதியில் கல்குவாரி அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து பிடிஓ கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் நடராஜனிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

Related Stories: