ஆலங்குளத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு

ஆலங்குளம் அக்.27: ஆலங்குளத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது. ஆலங்குளம் நகருக்குள் நெல்லை-தென்காசி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் தவிர்க்கும் பொருட்டு ஆலங்குளம் காமராஜர் சிலை அருகில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. நெல்லை எஸ்பி அருண்சக்திகுமார் தலைமை வகித்து புறகாவல் நிலையத்தை திறந்து வைத்தார். ஆலங்குளம் டிஎஸ்பி ஜாகிர்உசேன் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் வரவேற்றார்.

விழாவில் கலந்து கொண்ட எஸ்.பி சாலை சீரமைக்க உதவிய முருகன், கார்த்திகேயன் ஆகியோரை கவுரவித்தார். அதனை தொடர்ந்து 50 நபர்களுக்குத் ஹெல்மெட் வழங்கி, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்துப் பேசினார். தொடர்ந்து சாலை விபத்தை தடுக்கும் நோக்கில் பொதுமக்கள் உதவியுடன் அமைக்கப்பட்ட பேரிக்காடு மற்றும் சிசிடிவி கேமிராவை பார்வையிட்டார். விழாவில் எஸ்ஐக்கள் சுரேஷ், கிருஷ்ணன், ஆலங்குளம் செல்வராணி ஜவுளி நிறுவன உரிமையாளர் பிரின்ஸ் தங்கம், நகர திமுக செயலாளர் நெல்சன் பங்கேற்றனர். தனிப்பிரிவு காவலர் ஜெயபாலன் நன்றி கூறினார்.

Related Stories: