கடன் திட்ட அறிக்கை வெளியீடு ரூ. 12,523 கோடி கடன் இலக்கு

திருப்பூர்,அக்.25:திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட முன்னோடி வங்கியாளர் கூட்டத்தில், நபார்டு வங்கியின் 2020-21ஆம் ஆண்டிற்கான திருப்பூர் மாவட்டத்தின் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டார்.

நபார்டு வங்கி தயாரித்த திருப்பூர் மாவட்டத்திற்கான 2020-2021ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த திட்ட அறிக்கையில் மொத்த வளம் சார்ந்த கடனாற்றல் மதிப்பீட்டினை ரூ.12,523 கோடியே 10 லட்சத்தில், வேளாண்மைத்துறைக்கு ரூ.3,349 கோடியே 89 லட்சம், ரூ.7,435 கோடியே 04 லட்சம் சிறு,குறு தொழில்களுக்கும், ரூ.444 கோடியே 75 லட்சம் ஏற்றுமதி கடனுக்காகவும், ரூ.208 கோடியே 86 லட்சம் கல்விகடனுக்காகவும், ரூ.513 கோடியே 86 லட்சம் மரபு சாரா எரிசக்தி கடனுக்காகவும், ரூ.35 கோடியே 59 லட்சம் கோடி சமூக உட்கட்மைப்பு கடனுக்காகவும் மற்றும் ரூ.314 கோடியே 36 லட்சம் இதர கடனுதவியாகவும், இத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இதில், 9 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் மற்றும் 2 ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடியே 13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலான வங்கி கடனுதவியினையும் கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கினார். இந்நிகழ்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், இந்திய ரிசர்வ் வங்கி உதவி பொதுமேலாளர் ராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியமூர்த்தி, அரசு அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: