காஞ்சிபுரம் மாவட்ட கருவூல கட்டிட பூமி பூஜை

காஞ்சிபுரம், அக்.25: காஞ்சிபுரம் மாவட்டத்துக்கான புதிய கருவூல கட்டிடம் கட்டுவதற்கு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்டப்பட உள்ள புதிய கருவூல கட்டிடம் அதிக நவீன வசதிகளுடன் கூடிய கருத்தரங்கம், விருந்தினர் அறை கொண்ட முதல் கட்டிடமாகும். 21 ஆயிரம் சதுரடியில் தரை மற்றும் 2 தளங்கள் கொண்டதாக இந்த  கட்டிடம் அமைக்கப்பட உள்ளது.தரைதளத்தில் காப்பறை, ஓய்வூதிய பிரிவு, ஓய்வூதியர்களுக்கான அனைத்து வசதிகளுடன் காத்திருப்பு அறை அமையவுள்ளது. முதல் தளத்தில் அதிகாரிகளுக்கான அறைகளும், பிற அலுவலக பிரிவுகளும், 2ம் தளத்தில் இணையவசதி கொண்ட  கருத்தரங்கம், பதிவறை மற்றும் விருந்தினர் அறை ஆகியவை அமையவுள்ளது.

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ₹4.96 கோடியில் புதிய கருவூல கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை கலெக்டர் பொன்னையா தலைமையில் நேற்று நடந்தது.காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன், மாவட்ட கருவூல அலுவலர் செல்வம், கூடுதல் கருவூல அலுவலர் கோபிநாத், உதவி கருவூல அலுவலர் சுந்தர்ராஜன், பொதுப்பணித் துறை கட்டிட கோட்டம்  காஞ்சிபுரம் செயற்பொறியாளர் தர், உதவி செயற்பொறியாளர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: