சேலம், அக்.25: சேலத்தில், சிவகாசி பட்டாசு பஜார் விற்பனை அங்காடிகளில் பல்வேறு ரகங்களில் பட்டாசுகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிர்வாகிகள் கூறியதாவது: தீபாவளி பண்டிகையையொட்டி, சேலம் மாநகரில் முதல் முறையாக புத்தம் புதுவகை பட்டாசுகள் சிவகாசியில் இருந்து நேரடியாக தருவிக்கப்பட்டு விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. சேலம் சாரதா கல்லூரி ரோடு சண்முகா மருத்துவமனை எதிரிலும், சேலம் தேர்வீதி ராஜகணபதி கோயில் அருகிலும், ஓமலூர் சாலையில் நடராஜ் செட்டியார் திருமண மண்டப வளாகம் அருகிலும், அழகாபுரம் காவல்நிலையம் அருகே 2வது தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரில் ரவிசங்கர் திருமண மண்டபம் அருகிலும், சீலநாயக்கன்பட்டியில் சிவசக்தி முருகன் கோயில் மண்டபம் அருகிலும் விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ளது.