கல்லிடைக்குறிச்சியில் கடை படிக்கட்டில் மோதிய அரசு பஸ்

அம்பை, அக். 24: நாகர்கோவிலில் இருந்து பாபநாசத்திற்கு நேற்று மாலை அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை கன்னியாகுமரியை சேர்ந்த இந்திரன் (40) என்பவர் ஓட்டினார். பொன்ராஜ் (40) கண்டக்டராக இருந்தார். பஸ்சில் 40 பயணிகள் பயணித்தனர்.

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பஸ் புறப்பட்டது. சிறிது தூரத்தில் ஸ்பீடு பிரேக்கில் பஸ் ஏறி இறங்கும்போது பிரேக் கட்டானதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ், கல்லிடைக்குறிச்சி பிரதான சாலையோர செல்போன் கடை முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை இடித்துவிட்டு கடை படிக்கட்டில் மோதி நின்றது.பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்து இறங்கினர். அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பஸ்சில் இருந்த பயணிகள், மற்றொரு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அம்பை தாசில்தார் வெங்கடேஷ், கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் அங்கையற்கன்னி தலைமையில் வந்த போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

Related Stories: