வெள்ளகோவில் அருகே கற்களை கடத்திய லாரி பறிமுதல்

வெள்ளகோவில், அக். 23: வெள்ளகோவில் அருகே கற்கள் கடத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.காங்கயம், வெள்ளகோவில், ஊதியூர் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண், மணல், ஓடைக்கற்கள் கடத்தல் மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு மணல் ஏற்றி செல்லுதலில் ஈடுபடுத்தப்படும் லாரிகளை பறிமுதல் செய்து, அவ்வப்போது அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் சில அதிகாரிகள் ஒத்துழைப்புடன் கடத்தல் சம்பவம் தொடந்து நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கரூரில் இருந்து காங்கயத்திற்கு வெங்க கற்கள் ஏற்றி கொண்டு வந்த லாரியை வெள்ளகோவில் அருகே சேனாபதிபாளையம் பகுதியில் காங்கயம் வட்டாட்சியர் புனிதவதி தலைமையில் வருவாய்துறையினர் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அப்போது, உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் அந்த லாரி கரூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தாராபுரம் சப்-கலெக்டர் விசாரணை நடத்துவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: