அதிமுக 48வது ஆண்டு தொடக்க விழா எம்ஜிஆர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை

நெல்லை, அக். 18: அதிமுக 48வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி நெல்லையில் எம்ஜிஆர் சிலைக்கு அமைச்சர்கள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக  48ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, எம்ஆர்.விஜயபாஸ்கர், உதயகுமார், செல்லூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன், சரோஜா, ராஜேந்திரபாலாஜி, எம்பிக்கள் முத்துக்கருப்பன், விஜிலாசத்யானந்த் மற்றும்  முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன்,  வளர்மதி, கோகுலஇந்திரா, அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, புறநகர் மாவட்ட செயலாளர் பிரபாகரன், மனோகரன் எம்எல்ஏ, முன்னாள் எம்பி. அன்வர்ராஜா, மாநில அமைப்பு செயலாளர்கள் மனோஜ்பாண்டியன், சுதா பரமசிவன், மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்எல்ஏக்கள் தர்மலிங்கம், முத்துலட்சுமி, பகுதி செயலாளர் ஜெனி மற்றும் நிர்வாகிகள் பாப்புலர் முத்தையா, கல்லூர் வேலாயுதம், ஆர்பி.ஆதித்தன், பல்லிக்கோட்டை செல்லத்துரை, ஹரிகரசிவசங்கர், ஜெரால்டு, மருதூர் ராமசுப்பிரமணியன், வக்கீல் ஜோதிமுருகன், கேடிசி சின்னபாண்டி, பூக்கடை சப்பாணிமுத்து, அப்ரின் பீர்முகம்மது, தங்கபிச்சையா,  பாறையடி மணி, டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கம்  லட்சுமணன், தமிழ்செல்வி, நத்தம்  வெள்ளப்பாண்டி, பகவதி முருகன், இட்டமொழி டென்சிங், வட்ட செயலாளர்கள்  மூக்கையா, அருணாசலம், சிவா, நடராஜன்,  உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: