மாவட்டத்தில் 135 மி.மீ. மழை பதிவு

திருப்பூர், அக். 15:  திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 135 மி.மீ. மழை பதிவானது. அதிகபட்சமாக மடத்துக்குளத்தில் 33 மி.மீ. மழை பதிவாகியது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் காங்கயம், பொங்கலூர், வெள்ளகோவில், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உழவு பணிகளை மேற்கொண்டு பயிரிடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 7 மணி வரை, மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி வருகிறது. நிலத்தடி நீரும் உயர்ந்துள்ளதால் கிணற்றுப்பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை அளவு நிலவரம் (மில்லி மீட்டரில்): திருப்பூர் வடக்கில் 5, திருப்பூர் தெற்கில் 5.30, திருப்பூர் கலெக்டர் அலுவலகம் 4.50, பல்லடம் 2, காங்கயம் 27, அவிநாசி 1, திருமூர்த்தி டேம் 12, உடுமலை 14.80, மடத்துக்குளம் 33, அமராவதி டேம் 12, வெள்ளகோயில் வருவாய் துறை அலுவலகம் 3, திருமூர்த்தி டேம் (ஐ.பி) 12 மி.மீ. என மொத்தம் 135 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சராசரி 8.44 மி.மீ. ஆகும்.

Related Stories: