லாரி டிரைவரிடம் திருஷ்டி கழிப்பதாக 25 ஆயிரம் அபேஸ் : திருநங்கை கைது

சென்னை: திருஷ்டி கழிப்பதாக கூறி லாரி டிரைவரிடம் 25 ஆயிரத்தை அபேஸ் செய்த திருநங்கையை போலீசார் கைது செய்தனர். விழுப்புரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40). சென்னையில் உள்ள தனியார் குடிநீர் விற்பனை நிறுவனத்தில், டேங்கர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, இவர் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் அருகே லாரியில் சென்றபோது, திடீரென லாரி பழுதானது. இதனால், அங்குள்ள ஒரு ஒர்க்‌ஷாப் சென்று, லாரியை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்கு வந்த 3 திருநங்கைகள், கோவிந்தராஜிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் 20 கொடுத்துள்ளார். அப்போது கோவிந்தராஜிடம், ‘உங்களது பர்சை கொடுத்தால் திருஷ்டி கழித்து தருகிறோம். அதன் பிறகு வருவாய் அதிகரிக்கும் என 3 திருநங்கைகளும் ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.

இதை நம்பிய கோவிந்தராஜ், பணத்துடன் இருந்த பர்ஸை அவர்களிடம் கொடுத்துள்ளார். அவர்கள் திருஷ்டி கழிப்பதாக நாடகம் ஆடி, பர்சில் இருந்த 25 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.இதுகுறித்து பூந்தமல்லி போலீசில், டிரைவர் கோவிந்தராஜ் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளவரசன் (எ) ஜோதி (20) என்கிற திருநங்கையை கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய 2 திருநங்கைகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: