ஆட்டையாம்பட்டி அருகே பைப் லைன் உடைந்து வீணாகி வரும் குடிநீர்

ஆட்டையாம்பட்டி, அக்.10: ஆட்டையாம்பட்டி அருகே பைப் லைன் உடைப்பால், பள்ளி முன்பு குடிநீர் ஆறாக ஓடுகிறது. இதனால், மாணவர்கள் அவதியடைந்துள்ளனர்.

பூலாம்பட்டி-ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம், ஆட்டையாம்பட்டி வழியாக வெண்ணந்தூர்,  காளிப்பட்டி, ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பைப்லைன் அமைத்து பல ஆண்டுகளானதால், ஆங்காங்கே குழாய் உடைந்து சாலையில் வெளியேறி குடிநீர் வீணாகி வருகிறது. ஆட்டையாம்பட்டி-வெண்ணந்தூர் சாலையில், மேட்டுக்கடை அருகே கடந்த ஒரு மாதமாக குடிநீர் பைப் உடைந்து சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், சாக்கடையில் கலந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவது மட்டுமல்லாமல், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வாசலில் ஆறாக ஓடுவதால், மாணவர்கள் பள்ளிக்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, உடைந்த பைப் லைனை உடனடியாக சரி செய்து, குடிநீர் சாக்டையில் கலந்து வீணாவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertising
Advertising

Related Stories: