மத்திய சிறையில் வார்டனை தாக்கிய 3 கைதிகள் தனி செல்லுக்கு மாற்றம்

திருச்சி, அக். 10: திருச்சி மத்திய சிறையில் வார்டனை தாக்கிய 3 கைதிகள் தனி செல்லுக்கு (ஆறரை) மாற்றப்பட்டனர். திருச்சி மத்திய சிறையில் வார்டன்களாக பணியாற்றி வருபவர்கள் புண்ணியமூர்த்தி மற்றும் முருகானந்தம். இவர்கள் இருவரும் கடந்த 6ம் தேதி திருச்சி சிறையில் பிளாக் எண் 6ல் அடைக்கப்பட்டு இருந்த தண்டனை கைதிகளான மதன்குமார், தரன் ஆகியோரை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வேறு பிளாக்கிற்கு மாற்றுவதற்காக அழைத்து சென்றனர்.

Advertising
Advertising

அப்போது அதே பிளாக்கில் இருந்த மற்ற விசாரணை கைதிகளான மதுரையை சேர்ந்த கார்த்திக்(32), முனியசாமி (29), சிவகங்கை காரைக்குடியை சேர்ந்த திருச்செல்வம் (37) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் திடீரென வார்டன் புண்ணியமூர்த்தியை 3 பேரும் தகாத வார்த்தைகளால் திட்டி, அவருடைய சட்டையை பிடித்து தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சிறை போலீசாரை தாக்கிய 3 பேரையும் தனி செல்லுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டதையடுத்து அவர்கள் அங்கு மாற்றப்பட்டனர்.

Related Stories: