காங்கயம் பஸ் நிலையத்தில் தீத்தடுப்பு சாதனம் பொருத்தப்பட்டது

காங்கயம்,அக்.10: காங்கயம் பஸ் நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீத்தடுப்பு சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. காங்கயம் பஸ் நிலையத்திற்கு பல மாவட்டங்களில் இருந்து தினமும் 450 பஸ்கள் இங்கு வந்து செல்கிறது. இது தவிர கிராமங்களுக்கு டவுண் பஸ்கள் 25 இயக்கப்படுகிறது. இதனால் காங்கயம் பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் எந்நேரமும் அதிக அளவில் இருந்து கொண்டே இருக்கும். வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட வணிக கடைகள் செயல்படுகிறது. இங்கு வரும் பஸ்சில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு தீப்பிடித்தாலோ, வணிக நிறுவனத்தில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தாலோ ஏற்படும் சேதத்தை தவிர்க்கவும், பொதுமக்களை பாதுகாக்கவும், தீத்தடுப்பு சாதனம் பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து காங்கயம் நகராட்சி சார்பில், பஸ் நிலைய மையப்பகுதியில் தீத்தடுப்பு சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. தீப்பிடித்தால், கருவியை எவ்வாறு இயக்க வேண்டும்? என்ற தீயணைக்கும் முறைகளும் படத்துடன் விளக்கப்பட்டுள்ளது.

Related Stories: