உலக சிலம்பம் போட்டியில் கோவை மாணவர்கள் சாதனை

ேகாவை, அக். 10: மலேசியாவில் நடந்த உலக அளவிலான சிலம்பம் போட்டியில் கோவையை சேர்ந்த மாணவர்கள் 18 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். கோவைப்புதூர் பகுதியில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சமீபத்தில் மலேசியாவில் நடந்த உலக அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்றனர். இதில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இப்போட்டியில், கோவை ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவன் பிரகதி உதயேந்திரன் இரட்டை சுருள் மற்றும் கம்பு ஜோடி சண்டையில் இரண்டு தங்கம் மற்றும் கம்பு சண்டையில் ஒரு வெள்ளி வென்றார். 6ம் வகுப்பு மாணவி விஸ்மயா இரண்டை சுருள் மற்றும் கம்பு சண்டையில் 2 தங்கமும், ஒன்பதாம் வகுப்பு மாணவன் சவுந்தரராஜ் நெடுங்கம்பு வீச்சு போட்டியில் 2 தங்கமும், 7ம் வகுப்பு மாணவி கரிஷ்மா கம்பு சண்டையில் ஒரு தங்கம்

 மற்றும் ஒற்றை சுருளில் ஒரு வெள்ளியும், பிளஸ்1 மாணவி மவுலிகா இரட்டை சுருள், கம்பு ஜோடியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கமும், பிளஸ்1 மாணவன் ஹரீஸ் கம்பு சண்டையில் தங்கமும், கம்பு ஜோடியில் வெள்ளியும் வென்றார். மேலும், 9ம் வகுப்பு மாணவி மித்ரா நெடுங்கம்பு ஜோடியில் ஒரு வெள்ளி வென்றார். இந்த பள்ளி மாணவர்கள் மொத்தம் 18 தங்கம், 15 வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கம் என மொத்தம் 34 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: