சேதமடைந்த மின்கம்பம் சீரமைப்பு பொதுமக்கள் அதிர்ச்சி சீர்காழியில் கல்வி சேவையில் சிறந்து விளங்கும் பெஸ்ட் கல்வி நிறுவனங்கள்

சீர்காழி, அக்.10: நாகை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் நடராஜன் என்பவரால் 1984ல் தொடங்கப்பட்டது மெட்ரிக் பள்ளி. ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த ஆங்கில வழிக்கல்வியை எளிமையாக கிடைக்க வழி செய்தார். தொடர்ந்து 1975 ம் ஆண்டு பெஸ்ட் டுடோரியல் சென்டர் என்ற கல்வி நிறுவனம் நடராஜன் மற்றும் கிபாயத்துல்லா ஆகிய இரு கல்வியாளர்கள் இணைந்து தொடங்கப்பட்டது. கல்வியில் பின் தங்கிய வறுமையால் கற்க இயலாத பல மாணவ மாணவிகளுக்கு எளிய முறையில் ஆங்கில பாடத்தை, இலக்கண வளத்தோடு கற்பித்தது. சீர்காழி நகரில் 1984ல் நர்சரி&பிரைமரி பள்ளியாக தொடங்கி 2000த்தில் உயர்நிலைப் பள்ளியானது. தொடர்ந்து மேல்நிலைப் பள்ளியாக 2002ம் ஆண்டு வளர்ச்சியடைதது. மேலும் சீர்காழி மற்றும் அதனை சுற்றியுள்ள மாணவா;கள் பட்டப்படிப்பு பயில்வதற்கு வெகுதூரம் செல்ல வேண்டியிருந்த நிலையை மாற்றி அப்பகுதியில் முதன் முதலாக 2004 ஆம் ஆண்டில் பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது.

கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தலைவராக அமுதா நடராஜன், செயலாளராக வழக்கறிஞர் ராஜ்கமல், இயக்குனர்களாக மருத்துவர் காயத்ரி, மருத்துவர் செந்தாமரைக் கண்ணன், பொறியாளர் ஆதித்யா ஆகியோர்களின் ஆலோசனையோடும், ஒத்துழைப்போடும் பெஸ்ட் கல்வி நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து 35 ஆண்டுகளாக கல்வியில் மட்டுமல்லாமல் விளையாட்டு, யோகா, கராத்தே, கணினி என பல துறைகளில் மாணவர்களின் தனித்திறமையை வெளிக் கொணர்ந்து சாதனை மாணவர்களாக மாற்றி வருகிறது.பள்ளியில் பயிலக்கூடிய அனைத்து மாணவர்களும் நுட்பமான போட்டித் தேர்வுகளில் கூட எளிமையாக வெற்றி பெறும் அகையில் அவர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்று தாளாளர் ராஜ்கமல், நிறுவனர் நடராஜன் ஆகியோர் தெரிவித்தனர்.

Related Stories: