அணைக்கட்டு அடுத்த நாராயணபுரத்தில் சிறுவனுக்கு டெங்கு பாதிப்பு

அணைக்கட்டு, அக்.9: அணைக்கட்டு தாலுகா ஊணை வாணியம்பாடி ஊராட்சி, ஏரிப்புதூர் அடுத்த நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன்கள் ஹரிஷ்(6) மற்றும் அம்ரீஷ். இருவரும் கடந்த ஒரு வராமாக தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர்.இதையடுத்து, அவர்களை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சோதனை செய்ததில் ஹரிஷ்க்கு டெங்கு பாதிப்பும், அம்ரீஷ் சாதாரண காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இவர்கள் வசித்து வரும் பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே சிமென்ட் சாலையில் கழிவுநீர் வெளியே செல்ல கல்வெர்ட் அமைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாய் தூர்வாரி பல மாதங்கள் ஆவாதல் கழிவுநீர் வெளியேற வழியின்றி நிரம்பி உள்ளது. இதனால், அதில் கொசுக்கள் உற்பத்தியாகி அருகில் வசிக்கும் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர்.

இதனை அகற்றகோரி பல முறை பிடிஓ, ஊராட்சி செயலாளரிடம் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், அங்கு தேங்கியுள்ள இடத்தின் அருகில் வசித்து வரும் மேலும் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு அரசு சிகிச்சை பெற்று வருவதால் பொதுமக்கள் காய்ச்சல் பீதியில் உள்ளனர். இதனால், கிராமத்தில் அரசு மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.மேலும், கால்வாயை தூர்வாரி சீரமைக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: