வளமீட்பு மையம் துவக்கம்

தாம்பரம், அக். 4: தாம்பரம் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இந்தபகுதிகளில் தினமும் பொதுமக்களிடம் இருந்து குப்பை பெற்று, மேற்கு தாம்பரம் கன்னடபாளையத்தில் இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.இந்நிலையில், மேற்கு தாம்பரம் கன்னடபாளையம் மைக்ரோ கம்போஸ்ட் சென்டரில் புதிதாக வளமீட்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கருப்பையா ராஜா துவங்கி வைத்தார். இதில் சுகாதார அலுவலர் மொய்தீன், ஆய்வாளர்கள் ஆல்பர்ட் அருள்ராஜ், ஜனார்த்தனம், காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் கருப்பைய ராஜா கூறுகையில், வீடுகளில் இருந்து வெளியேறும் செருப்பு, ரெக்சின்பேக், மெத்தை, தெர்மாகூல், இ-வேஸ்ட், அபாயகரமான கழிவுகள், உபயோகமற்ற துணிகள் ஆகியவை சேகரிக்கப்படுகின்றன.எனவே, மேற்கு தாம்பரம் 33, 37, 38 மற்றும் 32வது வார்டுகளை சேர்ந்த மக்கள், மேற்குறிப்பிட்ட தேவையற்ற பொருட்களை குப்பையில் சேர்த்து கொடுக்காமல், வளமீட்பு மையத்தில் கொடுக்கலாம் என்றார்.

Related Stories: