நெல்ைல, அக். 2: புரட்டாசி சுவாதி நட்சத்திரத்தையொட்டி கீழப்பாவூர், புளியங்குடி நரசிம்மர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். புளியங்குடி பஸ் நிலையம் அருகேயுள்ள லட்சுமி நரசிம்மர் கோயில், தட்சிண அகோபில ஸ்தலமாகும். கிருதயுகத்தில் சிவனுக்கும், பிரம்மாவுக்கும் காட்சியளித்த சொரூபத்தில் லட்சுமி நரசிம்மர் இங்கு கோயில் கொண்டுள்ளார். கிழக்கு நோக்கிய இக்கோயிலின் கருவறையில் மூலவராக லட்சுமி நரசிம்மர் வீற்றிருப்பது வேறெங்கும் காணமுடியாத தனிச்சிறப்பாகும். இக்கோயிலில் மாதந்தோறும் சுவாதி நட்சத்திரத்தன்று சிறப்பு ஹோமங்கள், அபிஷேகங்கள் நடைபெறும்.