நெல்லை அருங்காட்சியகத்தில் அக்.10ல் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டி

நெல்லை, அக்.2:  நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவையொட்டி வருகிற 10ம் தேதி காலை 10 மணிக்கு  பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

 இதன்படி 6 முதல் 8ம் வகுப்பினருக்கு மகாத்மா காந்தி மற்றும் பக்தவச்சலம் வாழ்க்கை வரலாறு குறித்த வினாடி- வினா போட்டி, 9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு உலக உத்தமர் காந்தி, காந்தியடிகளும் வாய்மையும், யாதும்ஊரே யாவரும் கேளீர், நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு, மாணவர்களும் சமுதாய தொண்டும் என்ற தலைப்புகளில் கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது.

 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காந்தியடிகளும் அகிம்சையும், காந்தியடிகளின் வாழ்க்கையில் இருந்து கற்க வேண்டிய பண்புகள், ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு, வாய்மையே வெல்லும், இந்திய ஒருமைப்பாடு ஆகிய தலைப்புகளில் பேச்சுப்போட்டியும் நடைபெறும்.

 போட்டிகளில் பங்கேற்போருக்கு எழுதுவதற்கு தேவையான தாள்கள் வழங்கப்படும், எழுதுப்பொருட்கள், வைத்து எழுத தேவையான அட்டையை மாணவர்கள் கொண்டுவரவேண்டும். ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒவ்வொரு போட்டிக்கும் 10 நபர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். பிற்பகலில் பரிசளிக்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0462-2561915 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி தெரிவித்துள்ளார்.

Related Stories: