தூத்துக்குடி கல்லூரியில் கலைபோட்டிகள்

தூத்துக்குடி, அக்.2: தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி மற்றும் பாரத் கேஸ் நிறுவனம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையேயான கலை இலக்கிய போட்டிகள் சுப்பையா வித்யாலயம் பள்ளியில் நடந்தது. இதில் மாணவியருக்கான கிராமிய நடனம், லோகோ வடிவமைப்பு, கவிதை போட்டி,  ஓவிய போட்டி, இருவகை பேச்சு போட்டி, மேற்கத்திய நடனம், குறும்படம் தயாரித்தல் மற்றும் சைகை மொழி உள்ளிட்ட பல போட்டிகள் நடந்தன.இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 17 கல்லூரிகளை சேர்ந்த 247 மாணவியர் கலந்து கொண்டனர். இதற்கான பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஜாய்சலின் ஷர்மிளா தலைமை வகித்தார். பாரத் பெட்ரோலிய அதிகாரி கோபிகிருஷ்ணா வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார்.இதில் அனைத்து போட்டிகளிலும் அதிக புள்ளிகளை பெற்று வஉசி கல்லரி, செயின்ட் மேரீஸ் சுயநிதி கல்லூரி ஆகியவை வெற்றி பெற்றன. நிகழ்ச்சிகளில் பேராசிரியர்கள் நாகலெட்சுமி, லாவண்யா, எமிமா, தங்கசெல்வம், செல்வ  சிவசங்கரி உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.

Related Stories: