கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு

பாபநாசம், அக். 2: பாபநாசம் அருகே அம்மாப்பேட்டையில் தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் தஞ்சாவூர் வேளாண்மை உதவி இயக்குனர் (தரக் கட்டுப்பாடு) சாருமதி ஆய்வு செய்தார். அப்போது உரக்கடைகளில் உர உரிமம் காலாவதியாகாமல் உள்ளதா, உரங்கள் அரசு நிர்ணயித்த விலையில் விற்கப்படுகிறதா, என்று ஆய்வு மேற்கொண்டார். உரம் வாங்கும் விவசாயிகளுக்கு பாயிண்ட் ஆப் சேல் மெஷின் மூலம் பட்டியலிட்டு வழங்க வேண்டும். கையிருப்பு உரங்களும், பாயிண்ட் ஆப் சேல் மெஷினில் உள்ளவாறு உரங்களின் இருப்பு சரியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திலும் குறைந்தபட்சமாக யூரியா 10 டன், டிஏபி மற்றும் பொட்டாஷ் தலா 5 டன் இருப்பு வைக்க வேண்டும். உரங்களின் இருப்பு விபரங்கள் தினசரி அறிக்கையாக வழங்க வேண்டும். பழுதடைந்த கிடங்குகள் சரி செய்ய அரசுக்கு கருத்துரு அனுப்ப வேண்டுமென உத்தரவிட்டார். ஆய்வின்போது அம்மாப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் சுஜாதா உடனிருந்தார்.

Related Stories: