நத்தம், குஜிலியம்பாறையில் சமுதாய வளைகாப்பு விழா

நத்தம், அக். 1: நத்தத்தில் சமூகநலம், சத்துணவு திட்ட துறையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. ஆண்டிஅம்பலம் எம்எல்ஏ தலைமை வகித்து, துவக்கி வைத்தார். திட்ட அலுவலர் கமலம் முன்னிலை வகித்தார். விழாவில் 160 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.இதில் அங்கன்வாடி பணியாளர் ஈஸ்வரி மற்றும் திட்ட பணி உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.குஜிலியம்பாறை அருகே புளியம்பட்டியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவுக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விசுபாவதி தலைமை வகித்தார். விழாவில் 160 பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோ, திட்ட மேற்பார்வையாளர் மஞ்சுளா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக மருத்துவர்கள் சத்யப்பிரியா, சந்திரபிரகாஷ் மற்றும் செவிலியர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர்.விழாக்களில் கர்ப்பிணி பெண்களுக்கு சேலை, தட்டு, வளையல், வாழைப்பழம், வெற்றி பாக்கு, மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, முக கண்ணாடி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

Related Stories: