தாறுமாறாக நிறுத்தும் வாகனங்களால் விபத்து அதிகரிப்பு

திருப்பூர்,செப்.30:திருப்பூர்-அவிநாசி ரோடு புஷ்பா பஸ் நிறுத்தத்தில்  பஸ்கள் மெயின் ரோட்டில் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் அடிக்கடி வாகன விபத்துகளால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர்-அவிநாசி ரோடு புஷ்பா பஸ் நிலையத்தில் தென் மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள், ஊட்டி, கோபி, கோவை, மைசூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நின்று பயணிகளை ஏற்றிச்செல்கிறது. இது போக நூற்றுக்கும் மேற்பட்ட நகர பஸ்களும் இயக்கப்படுகிறது. மாநகரின் மைய்யப்பகுதியாக இருப்பதால் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

அப்போதும் பரபரப்பாக இயங்கும் பஸ் நிறுத்தம் ஆகும்.   பஸ் நிறுத்ததில் நிழற்குடை இல்லாததால் பல மணி நேரமாக பயணிகள் காத்திருக்கின்றனர். ரோட்டின் மையத்தில் டிவைடர் இல்லாததால் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஒழுங்கற்ற வகையில் தாறுமாறாக நிறுத்தி பயணிகளை இறக்கி விடுகின்றனர். ரோட்டை கடக்கும் பயணிகளின் மீது பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. புஸ்பா பஸ் நிறுத்தத்தில் உள்ள ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி ரோட்டின் மையத்தில் டிவைடர் வைத்து வாகனங்களை ஒழுங்கு படுத்த மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: