கர்நாடகாவில் இருந்து உடுமலைக்கு வாக்குபதிவு இயந்திரங்கள் வந்தது

உடுமலை, செப். 26:  உள்ளாட்சி தேர்தலுக்காக கர்நாடகாவில் இருந்து உடுமலைக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.   தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு துவங்கி, வாக்காளர் பட்டியல் அச்சடிக்கும் பணி துவங்கி உள்ளது. அடுத்தகட்டமாக ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் இரும்பு ஓட்டுப்பெட்டிகளை தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பயன்படுத்தும்  வாக்குப்பதிவு இயந்திரங்கள், கர்நாடக மாநிலத்தில்

இருந்து எடுத்துவரப்படுகிறது. தும்கூர் மாவட்டத்தில் இருந்து 2687 கன்ட்ரோல் யூனிட், கல்புர்கியில் இருந்து 2355 பேலட் யூனிட், குடகு மாவட்டத்தில் இருந்து 1086, உத்தகாண்டாவில் இருந்து 1437, மத்திய, மாநில குடோன்களில் இருந்து 522 பேலட் யூனிட்டுகள் திருப்பூருக்கு கொண்டு வரப்படுகிறது.  உள்ளாட்சி தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ‘கர்நாடகா, பீகார் மாநிலங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துவரப்படும். மாநகராட்சி உதவி கமிஷனர், நகராட்சி ஆணையர், பேரூராட்சி செயல் அலுவலர்கள் அடங்கிய குழு, போலீஸ் பாதுகாப்புடன் சென்ற இந்த இயந்திரங்களை எடுத்து வரும். மக்களவை தேர்தலின்போது பயன்படுத்திய விவிபேட் கருவி, உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த வாய்ப்பில்லை’ என்றனர்.

Related Stories: